கொழும்பு - கண்டி வீதியில் 98 ஆவது கிலோ மீற்றர் 'கீழ் கடுகண்ணாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந் நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதியின் 98 ஆவது கிலோமீற்றர் பகுதியில் 'கீழ் கடுகன்னாவ' பகுதி மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனூடான போக்குரவரத்துக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கி வருகின்றன.

கொழும்பில் இருந்து கண்டிக்கு வரும்  வாகனங்களுக்கு  மாற்றுப் பாதைகள்

  • கேகாலையில் இருந்து பொல்கஹவெல-குருநாகல், கலகெதர கடுகஸ்தொட்டை வழியாக கண்டி.
  • மாவனல்லையில் இருந்து ரம்புக்கனை - ஹதரலியத்த - கலகெதர, கடுகஸ்தோட்டை ஊடாக கண்டி.
  • மாவனல்லையில் இருந்து ஹெம்மாதகம கம்பளை வரை - பேராதனை கண்டி

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் 

  • 1. கட்டுகஸ்தொட்டை கலகெதர - குருநாகல் வரை கொழும்பு வரை
  • 2. கட்டுகஸ்தோட்டை - கலகெதர - ரம்புக்கன வந்து கொழும்பு கண்டி பிரதான வீதி வழியாக  கொழும்புக்கு

ஆகிய வீதிகளை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் மேலும் தெரிவித்தார்.