பெற்றோராவதற்கு எதிர்பார்க்கும் எனினும் கருத்தரிப்பதில் சவால்களை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு நம்பகமான, அறஞ்சார்ந்த ரீதியில் ஆதரவை வழங்கும் நோக்கில் ஆசிரி மருத்துவ வைத்தியசாலையில் ஆசிரி நோவா IVF மற்றும் கருத்தரித்தல் மையம் அண்மையில் திறந்துவைக்கப்ட்டது.

இந்தியாவின் முன்னணி கருத்தரித்தலில் (IVF ) வலையமைப்பான நோவா IVF கருத்தரித்தல் (NIF) நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகள் மற்றும் மாற்றீட்டு மருத்துவ செயற்பாடகள் மூலம் அதிகமான வெற்றிகளுக்காக நன்கு அறியப்பட்டதாக விளங்குகின்றது. 

இதுவரை 40,000 ற்கும் அதிகமான IVF மூலமான கருத்தரிப்புகளைக் கொண்டாடும் NIF அதிநவீன கருத்தரித்தல் தொழில்நுட்பங்களை(ART) இந்தியாவில் பயன்படுத்துகிறது. 

திறப்பு விழாவில் உரையாற்றிய ஆசிறி ஹெல்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர்.மஞ்சுள கருணாரத்ன தெரிவிக்கையில்  'கருத்தரித்தல் பிரச்சினைகள் நாட்டில் அதிகரித்து வருவதால், இலங்கையில் உயர்தரமான மேம்பட்ட இனப்பெருக்க சிகிச்சையின் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். 

அக்கறை நிறைந்த, கூர்திறன்மிக்க பொறுப்பு நிறைந்த மற்றும் அறிவுத்திறன் நிறைந்த சூழலில் உயர் தரத்திலான தனிப்பட்ட மருத்துவப் பராமரிப்பை வழங்குவதே இந்தக் கூட்டாண்மையின் ஊடாக எமது நோக்கமாகும். 

இனப்பெருக்கம் தொடர்பான எமது நிபுணத்துவக் குழுவினர், நவீன தொழில்நுட்பம் மற்றும் கடுமையான நெறிமுறைகள் உயர்ந்த வெற்றி வீதத்தை அடைவதற்கான இலக்குகளாக அமைந்துள்ளன" என்றார். 

கருவுறாமை என்பது பல கட்டுக்கதைகளில் மறைக்கப்பட்ட ஒரு சிக்கலான மற்றும் உணர்திறன்மிக்க விடயமாகும். 

இருந்தபோதும்   இது காலத்துடன் இணைந்த உணர்திறன் மிக்க மருத்துவ பிரச்சினை என்பதுடன், ஏனைய நோய்கள் போல புரிதல்களுடன் சரியான முறையில் அணுகி மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

மருத்துவ உதவியை நாடுவது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும். 

அத்துடன், மருத்துச் சிறப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்த தனிப்பட்ட ரீதியான பராமரிப்புடன் கூடிய கருவுறுத்தல் நிலையம் மற்றும் உணர்வு ரீதியான ஒத்துழைப்பை வழங்குவது அவசியம்.

கருத்தரித்தல் தொடர்பான நிபுணர்கள், கருவியியலாளர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட உலகத் தரமான குழுவினால், உயர்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றோர் ஆவதற்கான கனவை  நனவாக்குவதற்கு ஆசிறி  நோவா  IVF  மற்றும் கருத்தரித்தல் நிலையம்> முழுமையான இனப்பெருக்க சிகிச்சையையும் வழங்குகிறது.

இனப்பெருக்கம் தொடர்பான சிகிச்சை மற்றும் தீர்வில் உளவள ஆலோசனை, ஆலோசனை, விசாரணைகள், இன்ட்ரா கருப்பை கருவூட்டல்(IUI), IVF , கருக்கள் மற்றும் விந்தணுக்களை உறையவைத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல், நன்கொடைத்திட்டம் என்பன கடுமையான நிபந்தனை மற்றும் கொள்கைகளுக்கு இணங்க ஒரு பகுதியாக அமையும். 

30 வருடங்களுக்கு மேலாக சிறப்பைக்கொண்டுள்ள ஆசிறி ஹெல்த், இலங்கையிலேயே அதிக மேம்பட்ட தொழில்நுட்பம், நோயாளர்களை மையமாகக்கொண்ட முன்னணி தனியார்துறை சுகாதாரப் பராமரிப்பாளராக விளங்குகிறது.