மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கட்டுகளால் இலகவான வெற்றியை பதிவு செய்துள்ளது.

மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டி20 போட்டி நேற்று (23) டுபாயில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மனித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இ.தீவுகள் அணி ஆரம்பத்திலிருந்து மோசமான துடுப்பாட்டத்தை  வெளிப்படுத்திய நிலையில், 48 ஒட்டங்களில் 8 விக்கட்டுகளை இழந்தது.

மறுமுனையில் ஜோடி சேர்ந்த டெய்லர், பிராவோ ஜோடி ஓரளவு நிலைத்து ஆட மே.இ.தீவுகள் அணி 19.5 ஓவர்களில் 115 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.

இதில் பிராவோ சிறப்பாக துடுப்பெடுத்தாடி  55 ஓட்டங்களையும், டெய்லர் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இமாட் வசீம் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

116 ஒட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 14.2 ஓவர்களில் 1விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 55 ஒட்டங்களையும் லதீப் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இமாட் வசீம் தெரிவுசெய்யப்பட்டார்.