கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை பூரண நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரிக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள் இன்று காலை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்கள் புவனேக அலுவிஹாரே, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஐக்கிய மக்கள் சக்தியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட பல பிரிவினர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM