எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் கோப்: 26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டை நடத்த ஐக்கிய அரபு இராச்சியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று டுபாய் ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.

"மாநாட்டை வெற்றியடையச் செய்ய எங்களின் அனைத்து திறன்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்" என்று எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமராகவும் பணியாற்றும் ஷேக் மொஹமட் பின் ரஷித் அல்-மக்தூம் வியாழக்கிழமை ஒரு டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.
2022 இல் குறித்த மாநாட்டை எகிப்து நடத்தும் நிலையில், மத்திய கிழக்கில் வருடாந்திர COP: 26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கைகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த பேச்சுவார்த்தை மூன்றாவது முறையாக பெற்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (OPEC) உறுப்பினர்களால் நடத்தப்படும்.
முன்னாள் OPEC உறுப்பினர் கட்டார் 2012 இல் நடத்தியது, இந்தோனேசியா 2007 இல் மாநாட்டை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.