ஜெனிவா மனித உரிமை பேரவையில்  கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுலாக்கும் செயற்பாடுகள்   தொடர்பில்   இலங்கை அரசாங்கமும்  பிரிட்டன் அரசாங்கம்  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.  

நியுயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும்  பிரிட்டன்   பாராளுமன்ற செயலாளர் அலோக் சர்மாவும்   இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

இதன்போது ஜெனிவா பிரேரணையை அமுலாக்குதல்  தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து  விரிவாக ஆராயப்பட்டுள்ளது.    இந்த சந்திப்பையடுத்து  தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ள  பிரிட்டன்   பாராளுமன்ற செயலாளர் அமைச்சர் மங்கள சமரவீரவுடன்  பயனுள்ள சந்திப்பு ஒன்றை நடத்தியதாக  தெரிவித்துள்ளார். 

ஜெனிவா மனித உரிமை பேரவையில்  கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை  அமெரிக்காவுடன்   பிரிட்டனும்  இணைந்துகொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.