இந்­தி­யா–­பா­கிஸ்தான் கிரிக்கெட் தொட­ருக்கு இந்­திய மத்­திய அரசு அனு­மதி அளிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே பொது­வான இட­மான இலங்­கையில் வைத்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்­டி­களை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபை­களும் முடிவு செய்­தன. ஆனால் இந்த போட்­டிக்கு இந்­திய அரசு இன்னும் அனு­மதி அளிக்­க­வில்லை.

டிசம்பர் 15ஆம் திகதி முதல் ஜன­வரி 5ஆம் திகதி வரை அல்­லது டிசம்பர் 19ஆம் திகதி முதல் ஜன­வரி 4ஆம் திகதி வரை என்று இரண்டு வித­மான போட்டி அட்­ட­வ­ணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தயா­ரித்து பரிந்­துரை செய்­தி­ருந்­­தது. ஆனால்

இந்­திய மத்­திய அரசு இது­வரை ஒப்­புதல் அளிக்­கா­த தால் இந்த போட்டி நடத்­து­வ­தற்­கான வாய்ப்பு கணி­ச­மாக குறைந்து போய் விட்­டது.

ஜன­வரி மாதம் பாகிஸ்தான் அணி, நியூ­ஸி­லாந்­திற்கும் இந்­திய அணி அவுஸ்­தி­ ரே­லி­யா­வுக்கும் சுற்­றுப்­ப­ய ணம் செய்து விளை­யாட இருக்கி­றது. இதற்கு இடைப்­பட்ட காலத்தில் தான் இந்­தி­யா–­பா­கிஸ்தான் போட்­டியை நடத்த முடியும். ஆனாலும் பாகிஸ்தான் இன்னும் நம்பிக்கையை இழக்க வில்லை.