ஜனாதிபதி தலைமையில் தேசிய பாதுகாப்பு கல்லூரி திறப்பு - பன்னாட்டு இராஜதந்திரிகளும் பங்கேற்பு

By Digital Desk 2

11 Nov, 2021 | 05:29 PM
image

எம்.மனோசித்ரா

முப்படையினர் , பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவிகளை வகிக்கின்ற நிறைவேற்று அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு தொடர்பான கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நாட்டில் முதலாவது பாதுகாப்பு கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, இராஜதந்திரம் மற்றும் தேசிய நலன்களை உறுதிப்படுத்தும் பொதுக் கொள்கை ஆகிய துறைகளில் மூலோபாய சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவதே 'தேசிய பாதுகாப்புக் கல்லூரியின்' பணியாகும்.

காலி வீதி, கொழும்பு 3 இல் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு உரித்தான நீண்ட வரலாற்றைக் கொண்ட 'மும்தாஜ் மஹால்' கட்டிடத்தில் தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் , சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் , அவுஸ்திரேலிய பாதுகாப்பு பயிற்சி பல்கலைக்கழகம் , அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் நிபுணர்கள் பாடத்திட்ட குழுவிற்கான வளவாளர்களாக இருந்தனர். இந்த கல்லூரிக்கான நூலகத்தை அமைப்பதில் சீன அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் என்பன முழுமையாக பங்களித்துள்ளன. அத்தோடு அவுஸ்திரேலியா மற்றும் முப்படையினர் இதற்கான நூல்களை வழங்கப்பட்டுள்ளன.

இந்த கல்லூரியின் முதல் பாடநெறி நாளை வெள்ளிக்கிழமை முதல் 2022 ஆகஸ்ட் வரை 10 மாதங்களுக்கு முழு நேரமாக நடைபெறும். முப்படையைச் சேர்ந்த 27 அதிகாரிகளும், 04 பொலிஸ் அதிகாரிகளும் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி ,

இலங்கையில் பாதுகாப்பு கல்லூரி ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால தேவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு மூலோபாய கல்வி வாய்ப்புகளைப் பெற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகளைத் தேடுவதைத் தவிர வேறு வழியின்றி காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் நேசநாடுகளால் வழங்கப்படும் பாடநெறிகள் பலருக்கு பெரும் நன்மை பயக்கும் என்றாலும், இன்னும் பலருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளன.

எனவே, இக்கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய அனுபவத்தைப் பெறக்கூடிய மூத்த இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். இந்தப் பாடநெறியை கற்கும் அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் இராணுவத் தளபதி பதவி போன்ற சிரேஷ்ட கட்டளைத் தளபதி பதவியையும் வகிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க , பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் , முப்படைகளின் தளபதிகள் , பொலிஸ் மா அதிபர், பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் உப வேந்தர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இடமளித்தமை நல்லிணக்கத்திற்கான...

2022-11-28 17:20:21
news-image

மினுவாங்கொடையில் தீ பிடித்த சொகுசு பஸ்:...

2022-11-28 17:21:14
news-image

காத்தான்குடியில் காணாமல்போனவர் ஆற்றில் இருந்து சடலமாக...

2022-11-28 17:05:19
news-image

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17...

2022-11-28 16:54:25
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அழைப்பில் அலி...

2022-11-28 16:49:52
news-image

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

2022-11-28 16:45:50
news-image

காரை நகரில் நில அளவை மக்களின்...

2022-11-28 16:38:14
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:34:19
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34