(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
தனது அண்ணன் என்றும் பாராது மஹிந்த ராஜபக்ஷ செய்த தவறுகளை பொது மேடையில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை பாராட்டுகின்றேன்.
அத்துடன் ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத்திற்கு 2,500 ரூபா போதுமெனக்கூறியிருந்த அமைச்சரின் தேநீர்ச்செலவு மட்டும் 2 இலட்சத்தி 90 ஆயிரம் ரூபாவாகும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அண்மையில் பொது மேடை ஒன்றில் பேசிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ , தான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது நண்பர்கள்,உறவினர்களை அழைத்து செல்வதில்லை எனவும் தனது மனைவியைக்கூட சொந்த செலவிலேயே அழைத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ கூறுவதனைப் போன்றே முன்னாள் ஜனாதிபதிகளான ஜே .ஆர்.ஜெயவர்த்தன .ஆர். பிரேமதாச ஆகியோரும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது நண்பர்கள்,உறவினர்களை அழைத்து செல்வதில்லை.ஆனால் கோட்டாபாய ராஜபக்ஷவின் அண்ணனான மஹிந்த ராஜபக்ஷ் தான் ஜனாதிபதியாக இருக்கையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது நண்பர்கள்,உறவினர்களை அழைத்து சென்றார்.
இவ்வாறான தவறுகளை செய்தது தனது அண்ணன் என்றபோதும் அதனை பொது மேடையிலேயே தவறு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ்வை நாம் பாராட்டுகின்றோம்.
அத்துடன் ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத்திற்கு 2,500 ரூபா போதுமெனத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தேநீர் செலவு மட்டும் 290,000 ரூபா. அமைச்சர் பந்துல குணவர்தன முதலில் தனது அலுவலகத்தை சதொச கட்டிடத்தின் மேல் மாடியில் அமைத்திருந்தார்.
பின்னர் அதில் திருப்தி அடையாமல் அந்த அலுவலகத்தை காலி வீதிக்கு மாற்றினார். அந்த கட்டிடத்தின் மாத வாடகை மட்டும் 80 இலட்சம் ரூபா.
ஆனால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஒரு குடும்பம் வாழ ஒரு மாதத்திற்கு 2500 ரூபா போதுமெனக்கூறியிருந்தார்.ஆனால் அவரின் அலுவலக கட்டிடத்தின் மாத வாடகை மட்டும் 80 இலட்சம் ரூபா. அது மட்டுமன்றி அவரின் தேநீர்ச்செலவு மட்டும் 290,000 ரூபாவாகும். இது நியாயமா என கேட்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM