'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் செயற்பாடு சமூகங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தலாம் - ஹரீஸ்

Published By: Gayathri

11 Nov, 2021 | 05:09 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஒற்றுமையாக செயற்பட்டுவரும் சமூகங்களுக்கிடையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் செயற்பாடு வேற்றுமையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் இருந்து வருகின்றது. 

அதனால்  இந்த செயலணியின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்திவிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் எச்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தத்துக்கு பின்னர் நாடு அமைதியடைந்த பின்னர் சஹ்ரானின் தாக்குதலைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு சம்பந்தமில்லாத சில சட்டங்களை இயற்ற அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. 

குறிப்பாக பல ஆண்டுகாலமாக இருந்துவந்த தனியார் சட்டங்களை இல்லாமலாக்க ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. 

தனியார் சட்டங்களுக்கும் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என எமக்கு தெரியாது. இது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக மாறிவிடுமா என்ற அச்சம் சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கின்றது.

மேலும் ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணிக்கு தலைமை தாங்கும் மதகுரு நீதிமன்றத்தை அவமதித்தவர், நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பில் வெளியில் வந்தவர். 

அப்படிப்பட்ட ஒருவரை இந்த செயலணியின் தலைவராக நியமித்திருப்பது ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தையும் வேதனையில் ஆழ்த்தி இருக்கின்றது. 

இந்த நியமனம் தனக்கு தெரியாது என நீதி அமைச்சரும் தெரிவித்து, அந்த நியமனம் குறித்து வருத்தம் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஒற்றுமையாக செயற்பட்டுவரும் சமூகங்களுக்கிடையில் இந்த செயலணியின் செயற்பாடுகள் அமைதியின்மையை ஏற்படுத்திவிடுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. 

நாட்டில் நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்திக்கு இந்த அரசாங்கத்தில் இருக்கும் சிலர் முயற்சிக்கும் நேரத்தில் இந்த செயலணி அந்த முயற்சிகளுக்கு ஆப்பு வைத்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. 

அதனால் 'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக் கொடியை...

2025-02-06 19:11:23
news-image

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய...

2025-02-06 16:24:53
news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37