(துபாயிலிருந்து நெவில் அன்தனி)
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கதிகலங்கச் செய்த நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டி வீரர் டெரில் மிட்சல் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் இங்கிலாந்தை வீழ்த்தி இருபதுக்கு - 20 உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
அபு தாபி ஷெய்க் சய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (10) இரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்களால் அபார வெற்றிகொண்ட நியூஸிலாந்து, ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது அணியாகத் தகுதிபெற்றது.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கிய நியூஸிலாந்து 23 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்து வெற்றி இலங்கை அடைந்தது.
டெரில் மிச்செல் குவித்த அதிரடி அரைச் சதம், டெவன் கொன்வே, ஜேம்ஸ் நீஷாம் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் என்பன நியூஸிலாந்தின் வெற்றியை இலகுவாக்கின.
மேலும் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விளையாடவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
பாகிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் துபாயில் இன்று நடைபெறவுள்ள 2ஆவது அரை இறதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடும்.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆரம்ப வீரர் மார்ட்டின் கப்டில் (4), அணித் தலைவர் கேன் வில்லிம்ஸ் (5) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கை முறையே 4 ஓட்டங்களாகவும் 13 ஓட்டங்களாகவும் இருந்தபோது ஆட்டமிழக்க நியூஸிலாந்து தடுமாற்றம் அடைந்தது.
ஆனால், டெரில் மிச்செல், டெவன் கொன்வே ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 66 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர். கொன்வே 38 பந்துகளில் 6 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 46 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் க்ளென் பிலிப்ஸும (2) வெளியேறினார்.
அப்போது நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியினரும் இரசிகர்களும் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம் என எண்ணியிருக்கக் கூடும்.
எனினும், டெரில் மிச்செல், ஜேம்ஸ் நீஷாம் ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி 5ஆவது விக்கெட்டில் 17 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை இலகுவாக்கினர். நீஷாம் 11 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் 26 ஓட்டங்களை விளாசினார். டெரில் மிச்செல் 48 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
16ஆவது ஒவரிலிருந்து வெறும் 23 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்ததன் மூலமே நியூஸிலாந்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
இங்கிலாந்து பந்துவீச்சில் லியாம் லிவிங்டன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து, டேவிட் மாலன், மொயீன் அலி ஆகியோரின் அதிரடிகளின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைக் குவித்தது.
ஜொனி பெயார்ஸ்டோவ் (13), ஜொஸ் பட்லர் (29) ஆகிய இருவரும் ஆட்டமிழந்த பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன், மொயீன் அலி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 43 பந்துகளில் 63 ஓட்ங்களைப் பகிர்ந்தனர். மாலன் 41 ஒட்டஙகளுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்தவந்த லியாம் லிவிங்ஸ்டோன் (17), மொயின் அலியுடன் 4ஆவது விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மொயின் அலி 37 பந்தகளில் 3 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சௌதீ, அடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM