(எம்.எப்.எம்.பஸீர்)
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதக கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த போது வீடு திரும்பிய 3 சிறுமிகளும் பிணையம் ஒன்றின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று சிறுமிகளும் இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று பிணையம் ஒன்றின் கீழ் அம்மூன்று சிறுமிகளும் இவ்வாறு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.
இதன் பிறகு, வீட்டுக்கு தெரியாமல் இரகசியமாக அங்கிருந்து வெளியேறினால், பிணையம் ரத்து செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்படுவர் என இதன்போது நீதிவான் 3 சிறுமிகளையும் எச்சரித்தார்.
இந்த நிலையில் இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM