ஆசியர்கள் - பெற்றோர்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் அரசாங்கம் - 20 தொழிற்சங்கங்கள் கூட்டாக தெரிவிப்பு

Published By: Gayathri

10 Nov, 2021 | 07:47 PM
image

(நா.தனுஜா)

அதிபர், ஆசிரியர்களின் சம்பள உயர்வுப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் அதேவேளை, அவர்களின் பிரச்சினைக்கு உரியவாறு தீர்வைப்பெற்றுக்கொடுக்காமல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டனம் செய்வதாக 20 தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள பொதுச்சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்டு கல்வித்துறைக்கான மிகமுக்கிய முதலீடாக அமையக்கூடிய ஆசிரியர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால் இந்த அரசாங்கம் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெறுவதை இலக்காகக்கொண்டு மக்களுக்குப் பொருட்களை விநியோகிப்பதற்காகப் பலகோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இலங்கை வங்கிச்சேவை சங்கம், தபால் மற்றும் மின்சார ஒழுங்குபடுத்தல் அதிகாரிகள் சங்கம், ஊடகசேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய பொதுச்சேவை சங்கம், காப்புறுதிற்சேவை சங்கம் உள்ளடங்கலாக 20 தொழிற்சங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள பொதுச்சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தினால் ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  

கல்வியின்றி மனித சமூகத்தினால் அதன் நீண்டகால நிலைத்திருப்பை உறுதிசெய்யமுடியாது. கல்வித்துறையில் ஆசிரிய சமூகத்தின் பங்களிப்பு மிகப்பிரதானமானதாகும். 

இருப்பினும் ஆசிரியர்களால் இச்சமூகத்திற்கு ஆற்றப்படும் அளப்பரிய சேவைக்கு முற்றிலும் பொருத்தமற்ற வகையில் அவர்களுடைய ஊதியப்பிரச்சினை நீண்டகாலமாகத் தீர்வின்றித் தொடர்ந்து வருகின்றது. 

ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர்களுக்கான ஊதியம் குறைவாக இருப்பதனால், அந்தத் தொழிலுக்கான அங்கீகாரமும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. 

அத்தோடு வேறு எந்தவொரு தொழில்வாய்ப்புக்களும் கிடைக்காவிட்டால் மாத்திரம் ஆசிரியத் தொழிலுக்குள் பிரவேசிக்கின்ற போக்கும் காணப்படுகின்றது. இவையனைத்தும் நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைவதற்கு வழிகோலியுள்ளன.

 

அத்தோடு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள இலவசக்கல்வியை முடிவிற்குக்கொண்டுவரும் வகையில் புதிதாக பெருமளவான தனியார் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதன் விளைவாக மிகச்சொற்பளவான செல்வந்தர்கள் மாத்திரம் கல்வியைப் பெறக்கூடிய நிலை தோற்றம் பெற்றுள்ளது.

 

ஆனால் கல்வி என்பது வணிகரீதியான பொருளல்ல. மாறாக அது மனித உரிமைகளின் ஒன்று என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம். 

அதன்படி தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைத்து, இலவசக்கல்வியை வலுப்படுத்துவதன் ஓரங்கமான செயற்றிறனான பாடசாலைக்கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்குவதும் ஆசிரியத் தொழிலுக்கு உயர் அங்கீகாரத்தை வழங்குவதும் மிகவும் அவசியமாகும். 

இருப்பினும் கடந்த 24 வருடகாலமாக ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கவில்லை. மொத்தத்தேசிய உற்பத்தியில் குறைந்தபட்சம் 6 சதவீதமேனும் (நிதி) கல்வித்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்படுவது அவசியமெனினும், தற்போது வெறுமனே 1.7 சதவீதம் மாத்திரமே ஒதுக்கப்படுகின்றது.

 

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது தாம் ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்குவதாகத் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தது. 

இருப்பினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததன் காரணமாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்தன. 

அதனையடுத்து இப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் சுபோதினி தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் அக்குழுவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், அதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது. 

இந்நிலையில் கடந்த ஜுலை மாதத்திலிருந்து அதிபர், ஆசிரியர்களால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

தற்போதைய அரசாங்கத்தின்கீழ் இடம்பெற்ற சீனி மோசடியினால் 15 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது. பன்டோரா ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நிரூபமா ராஜபக்ஷ குடும்பத்தின் வசமுள்ள சொத்துக்களின் பெறுமதி 32 பில்லியன் ரூபாவாகும். 

கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியின் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட நிதி, சதொச வெள்ளைப்பூண்டு மோசடியின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட நிதி மற்றும் ஏனைய மோசடிகளால் நட்டமடைந்த நிதியை சேமித்திருந்தால் சுபோதினி குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அவசியமான நிதியை அரசாங்கத்தினால் திரட்டிக்கொண்டிருக்கமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41