தலவாக்கலை - இராணிவத்தை பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு ஆர்ப்பாட்டம்

Published By: Gayathri

10 Nov, 2021 | 05:37 PM
image

(க.கிஷாந்தன்)

லிந்துலை நாகசேனை நகரத்தில் இருந்து பெரிய இராணிவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அடிக்கடி கற்பாறைகள் சரிந்து விழுவதால் இப்பாதையூடாக வாகனங்கள் செல்லமுடியாதநிலை காணப்படுகின்றது.

எனவே குறித்த வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரி  இன்று (10.11.2021) காலை 10 மணிக்கு பிரதான வீதியை மறித்து வாகன சாரதிகளும் 50 இற்கு மேற்பட்ட பிரதேச மக்களும் இணைந்து  நாகசேனை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்திவாறு கோஷங்களை எழுப்பயநிலையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்தோடு இப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் கலந்துகொண்டதோடு வாகனங்களும் நிறுத்தப்பட்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நேற்று (09.11.2021) இரவு பெய்த கடும் மழையால் பாதையில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளது. 

இதனையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அப்புறப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதையில் கற்பாறைகள் சரிந்து விழக்கூடிய ஆபத்தான நிலை காணப்படுவதோடு, நாகசேனை நகரத்தில் இருந்து பெரிய இராணிவத்தை செல்லும் ஏழு கிலோமீற்றர் தூரம் கொண்ட பாதை மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு குன்றும் குழியுமாக காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் போக்குவரத்து சேவையை முறையாக பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பாதையினை உடனடியாக புனரமைத்து தருவதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04