இந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 76 பேர் இலங்கை வரவுள்ளதாக சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளக்கான அலுவலக செயற்திட்டத்தின் கீழ் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 76 அகதிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி இரண்டு குழுக்களாக நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதில் முதலாவதாக 41 பேர் நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதில் 41 ஆண்களும் 35 பெண்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு திரும்பும் அகதிகள்  மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மாத்தளை, திருகோணமலை மற்றும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.