நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஆறு அடி வரையும் மற்றும் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஐந்து அடி வரையும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், இரண்டு வீன் கதவுகள் 6 அங்குலம் வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் குறித்த அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் குறித்த நீர்த்தேக்கங்களின் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM