(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
முத்துராஜவலையை வன பாதுகாப்பு வலயமாக மாற்றுமாறு தெவிக்கும்போது அந்த பிரதேசத்தில் இருக்கும் பல கிராமசேசகர் பிரிவுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கீழ் கொண்டுவந்திருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வன்மையாக எதிர்க்கின்றோம் அந்த பிரதேசத்தின் மக்கள் பிரநிதிகளாகிய எம்மிடம்கூட இதுதொடர்பில் கலந்துரையாடவில்லை என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டொ புள்ளே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் கணக்குகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
முத்துராஜவல இந்த நாட்டின் வளம். பாரிய சதுப்பு நிலம். இந்த இடத்தில் பாரியளவில் சட்டவிராேத நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மணல் அகழ்வு, போதைப்பொருள் வியாபாரம், காணி நிரப்பு, காடழிப்பு இதுபோன்ற பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
கார்தினால் மெல்கம் ரஞ்சித் இதுதொடர்பான பிரச்சினைகளை பல தடவைகள் வெளிப்படுத்தி இருந்தார். அதனால் முத்துராஜவலையை வன பாதுகாப்பு வலயமாக மாற்றவேண்டும் என தெரிவிக்கும்போது, முத்துராஜவலையை சுற்றி இருக்கும் பல கிராமசேவகர் பிரிவுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கீழ் கொண்டுவந்திருக்கின்றது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்த பிரதேச மக்கள் எம்மிடம் கேள்வி கேட்கின்றனர். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே எம்மை அந்த மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கின்றனர்.
நகர அபிவிருத்து அதிகாரசபையின் நடவடிக்கையால் அந்த பிரதேச மக்களுக்கு தொழில் ரீதியில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கின்றனர்.
கொவிட் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு, தற்போது சற்று தலைதூக்கும்போது, இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. மரத்தால் விழுந்தவனை மாடேறியதுபோலே இன்று அந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் இதுதொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழுவில் கதைத்திருக்கலாம். அந்த பிரதேச மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் எம்முடன் கூட இதுதொடர்பில் கலந்துரையாடவில்லை. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் இந்த தீர்மானத்துக்கு எதிராக அந்த பிரதேச மக்கள் வீதிக்கிறங்கி இருக்கின்றனர்.
மேலும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு நகரம் தொடர்பான தெளிவு இல்லை. அந்த பிரதேசத்தின் கலாசாரம் தொடர்பான எந்த அறிவும் இல்லாமலேயே செயற்படுகின்றனர். அந்த நகரத்தில் அபிவிருத்தி செய்யும்போது அந்த பிரதேசத்தின் கலாசார முக்கியத்துவங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்.
இது எதுவும் இடம்பெறாமலேயே நகர அபிவிருத்தி அதிகாரசபை செயற்படுகின்றது. அதனால் இந்த நடவடிக்கையை நாங்கள் மிகவும் வன்மையாக எதிர்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM