இறுதிப் போட்டிக்குள் நுழைவது யார்? : இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Published By: Gayathri

10 Nov, 2021 | 11:36 AM
image

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஒய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் அபு தாபியில் இன்று இரவு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே தலைமைகளின் கீழ் இந்த இரண்டு அணிகளும் ஐசிசி உலகக் கிண்ண இறுதியில் சந்தித்துக்கொண்டபோது அப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. 

அதனைத் தொடர்ந்து பவுண்ட்றிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து சம்பியனாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும் அபு தாபியில் இன்று நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் அப்படி ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள இங்கிலாந்தும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள நியூஸிலாந்தும் சமபலம் கொண்ட அணிகளாக இருப்பதால் இன்றைய அரை இறுதிப் போட்டி இரசிகர்களை பரபரப்பின் உச்சத்துக்கே இட்டுச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலக சம்பயின் பட்டத்தையும் (2010), ஐசிசி ஆடவர் உலக சம்பியன் பட்டத்தையும் (2019) இங்கிலாந்து வென்றுள்ள அதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் (2021) நியூஸிலாந்து சம்பியனாகியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர் போன்ற பிரபல வீரர்கள் இடம்பெறாதபோதிலும் மேற்கிந்தியத் தீவுகளை தனது முதலாவது போட்டியில் 55 ஓட்டங்களுக்கு சுருட்டி, சிறந்த ஓட்ட வேக வெற்றியுடன் இந்த வருட இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டை இங்கிலாந்து ஆரம்பித்திருந்தது.

எவ்வாறாயினும் குழு 1இல் இடம்பெற்ற இங்கிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு கடைசி போட்டி முடிவின் பின்னரே உறுதிசெய்யப்பட்டது. கடைசிப் போட்டியில் தென் ஆபிரிக்காவிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்த போதிலும் அதன் அரை இறுதி வாய்ப்புக்கு தடை ஏற்படவில்லை.

இங்கிலாந்து அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானபோதிலும் துடுப்பாட்டத்தில் ஜொஸ் பட்லர் (ஒரு சதம் உட்பட 240 ஓட்டங்கள்), ஜேசன் ரோய் (123) ஆகிய இருவரே பிரகாசித்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக ஜேசன் ரோய் காயமடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இங்கிலாந்தின் வெற்றிகளில் பந்துவீச்சாளர்களே பெருவாரியாக பங்களிப்பு செய்திருந்தனர்.

ஆதில் ராஷித் (8) விக்கெட்கள்), மொயின் அலி (7), டய்ல் மில்ஸ் (7), கிறிஸ் வோக்ஸ் (5) ஆகியோர் பந்துவீச்சில் பிரகாசித்திருந்தனர்.

குழு 2இல் நியூஸிலாந்து தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தபோதிலும் ஏனைய 4 அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ட்ரென்ட் போல்ட் (11 விக்கெட்கள்), இஷ் சோதி (8), டிம் சௌதீ (7) ஆகியோர் பந்துவீச்சில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தமட்டில் சிரேஷ்ட வீரர் மார்ட்டின் கப்டில் (176), கேன் வில்லியம்சன் (26), டெரில் மிச்செல் (125) ஆகிய மூவரே 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்த வருட இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் முதல் 4 போட்டிகளில் வெற்றியீட்டிய இங்கிலாந்து கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்தது.

நியூஸிலாந்து முதல் போட்டியில் தோல்வியுடன் ஆரம்பித்து தொடர்ந்த 4 போட்டிகளில் வெற்றியீட்டியது.

இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் 21 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. 

அதில் இங்கிலாந்து 12 க்கு 9 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. ஒரு போட்டி சம நிலையில் முடிவடைந்ததுடன் மற்றொரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

நடப்பு உலகக் கிண்ணத்தில் கடந்துவந்த பாதை

இங்கிலாந்து

எதிர் மே. தீவுகள் 6 விக்கெட்களால் வெற்றி

எதிர் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் இலங்கை 26 ஓட்டங்களால் வெற்றி

எதிர் தென் ஆபிரிக்கா 10 ஓட்டங்களால் தோல்வி

நியூஸிலாந்து

எதிர் பாகிஸ்தான் 5 விக்கெட்களால் தோல்வி

எதிர் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றி

எதிர் ஸ்கொட்லாந்து 16 ஓட்டங்களால் வெற்றி

எதிர் நமிபியா 52 ஓட்டங்களால் வெற்றி

எதிர் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்களால் வெற்றி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41