நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 17 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 882  ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 10 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். இவர்களில் 8 பேர் ஆண்களும் 6 பேர் பெண்களுமாவர்.

30 வயதிற்குட்பட்டோரில் ஆணொருவரும் 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டோரில் ஆணொருவரும் பெண்ணொருவருமாற 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை வரை 328 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 546 473 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 522,184 பேர் குணமடைந்துள்ளனர்.