விவசாயிகள், மீனவர்கள் இல்லாத பகுதிகளில் மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் - கம்மன்பில

Published By: Digital Desk 3

09 Nov, 2021 | 05:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச சந்தையில் குறுகிய நாட்களுக்குள் எரிபொருளின் விலை 27 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதகாலமாக தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை.

ஆகவே எரிபொருளின் விலை அதிகரிப்பு தொடர்பில் நிதியமைச்சர் வரவு – செலவு திட்டத்தின் ஊடாக தீர்மானிப்பார் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மின்துண்டிப்பு இடம்பெறும் என்ற வதந்தியின் காரணமாக மண்ணெண்ணெய் கொள்வனவிற்கான கேள்வி இரு மடங்காக அதிகரித்துள்ளன. 

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இனி வரும் நாட்களில் விவசாயிகள், மீனவர்கள் இல்லாத பகுதிகளில் மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வலு சக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை ( 9 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 3 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என சமூகத்தின் மத்தியில் பரவிய வதந்தியின் காரணமாக நுகர்வோர் மண்ணெண்ணெயை அதிகளவில் கொள்வனவு செய்துள்ளார்கள். அதன் காரணமாக மண்ணெண்ணெய்க்கான கேள்வி இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. 

விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மண்ணெண்ணெய் நிவாரண நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லீற்றர் டீசல் 111 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் போது ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 77 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறான நிலையில் தற்போது பெரும்பாலான கைத்தொழிற்சாலைகள் படகுச்சேவை ஆகியவை மாத்திரமல்ல பேருந்துகளும் மண்ணெண்ணெய் பாவனையில் அதிகம் இயங்க ஆரம்பித்துள்ளன.

சமையல் எரிவாயுவிற்கும் மண்ணெண்ணெய்க்கும் இடையிலான விலை வேறுப்பாட்டின் காரணமாக நுகர்வோர் அதிகளவில் மண்ணெண்ணெய் பாவனைக்கு மாறிவிட்டார்கள். விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பெற்றோலிய 23 மில்லியன் நட்டத்தை எதிர்க் கொண்டு மண்ணெண்ணெயை நிவாரண அடிப்படையில் விநியோகிக்கிறது.

அவ்வாறான பின்னணியில் மண்ணெண்ணெய்கான கேள்வி அதிகரித்துள்ளதால் சில தட்டு;பாடு ஏற்படலாம்.தற்போதைய நிலையில் மண்ணெண்ணெயின் விலையை அதிகரிக்கவும் முடியாது. 

ஆகவே இனி வரும் நாட்களில்  விவசாயிகள், மீனவர்கள் இல்லாத பிரதேசத்திற்கு மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்.

மின்துண்டிப்பு என்ற தவறான வதந்திர காரணமாக நுகர்வோர் அதிகமாக மண்ணெண்ணெயை கொள்வனவு செய்துள்ளார்கள். இதனால் மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களை பொருத்தவரை ஒரு நாளில் மாத்திரம் சுமார் 550 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குக்காக்க கூடாது என்ற காரணத்தினால் எரிபொருளின் விலை கடந்த 5 மாத காலமாக அதிகரிக்காமல் உள்ளது. தற்போதைய நிலையில் உலக சந்தையில் எரிபொருளின் விலை 27 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே எரிபொருளின் விலையை அதிகரிப்பதா,அல்லது எரிபொருள் இறக்குமதிக்கான வரி நீக்கம் செய்வதா அல்லது நுகர்வோருக்கு மாற்று வழிமுறை ஊடாக நிவாரணம் வழங்குவதா என்பதை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அறிவிப்பார் என்றார்.             

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22