அமைச்சு பதவியையும் , அரச வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு தயாசிறி அரசாங்கத்தை விமர்சிக்கின்றார் - சாகர காரியவசம்

Published By: Digital Desk 3

09 Nov, 2021 | 02:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அமைச்சு பதவியையும், அரச வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைப்பது பிரச்சினைக்குரியது. கூட்டணியின் பங்காளி கட்சியினர் கூட்டுப்பொறுப்புடன் செயற்படுகிறார்களா, என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் ஈடுப்படுகிறார். 

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்தது அல்ல, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகளாவிய மட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அத்தியாசிய பொருட்கள் விலையேற்றம் என குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர்கட்சியின் தலைவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மறுபுறம் இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக காத்திருப்பதாகவும், அதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் குற்றஞ்சாட்டுகிறார்கள். 

1989 ஆம் ஆண்டு தொடக்கம் 92 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் பொறுப்புக் கூற வேண்டும்.

நாட்டில் 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முற்றுப்புள்ளி வைத்தார்.

கொவிட் தாக்கத்தின் காரணமாக குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் சேவைகள் மாதக்கணக்கில் முடக்கப்பட்டிருந்தன. அவ்வாறான பின்னணியில் தற்போது திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக சேவை பெறுநர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதனை இளைஞர்கள் நாட்டை விட்டு முழுமையாக வெளியேறுகிறார்கள் என குறிப்பிட முடியாது.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அமைச்சு பதவியை வகித்து அரசவரபிரசாதங்களை முழுமையாக வகித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைப்பது பிரச்சினைக்குரியதாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் கூட்டுப் பொறுப்பில் செயற்படுகிறார்களா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறிலங்கன் விமானம் தாமதமாகியதற்கு முகாமைத்துவம் மற்றும் ...

2024-02-26 20:21:38
news-image

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை...

2024-02-26 19:42:03
news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36
news-image

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு...

2024-02-26 18:21:31
news-image

பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார ...

2024-02-26 17:55:39
news-image

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை அனுப்ப விடுக்கப்பட்ட...

2024-02-26 17:47:41
news-image

அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார்...

2024-02-26 17:32:15
news-image

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்...

2024-02-26 17:21:22
news-image

பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

2024-02-26 17:03:49
news-image

அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது...

2024-02-26 17:20:05
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் பண்ணையாளர்களின் போராட்டம்...

2024-02-26 16:41:29