வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

Published By: Digital Desk 2

09 Nov, 2021 | 02:02 PM
image

( சபை நிருபர்கள் )

எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு நிதி அமைச்சரினால் வரவுசெலவுத்திட்ட உரை முன்வைக்கப்பட்ட பின்னர் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும் வரவுசெலவுத்திட்ட விவாத காலப் பகுதியில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு உட்பட வரவுசெலவுத்திட்ட விவாத காலப்பகுதி தொடர்பான செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கமைய வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் 27(2) நிலையியற் கட்டளையின் கீழான கேள்விக்காக வழங்கப்படும் நேரத்தை ஆகக் கூடியது 10 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு ஒன்றுவிட்ட நாட்கள் வாய்ப்புக்களை வழங்குவதற்கும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. 

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை முன்வைக்கப்படவில்லையாயின், வரவுசெலவுத்திட்ட விவாதத்தை பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

அதேநேரம், சில நிறுவனங்கள் மற்றும் துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்த ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி 2251/64 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் நோக்கில் நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58