(இராஜதுரை ஹஷான்)
முத்துராஜவெல சரணாலயத்தின் 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக அப்பிரதேச மக்கள் கலக்கமடைந்துள்ளார்கள். ஆகவே வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வெளியிடப்பட்ட அந்த அதிவிசேட வர்த்தமானி காரணமாக அப்பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.அதன் காரணமாக அப்பிரதேச மக்கள் பிரநிதியாகிய எனக்கும் தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு பகுதி என 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பிற்குள் சட்டவிரோதமான செயற்பாடுகள் இனி முன்னெடுக்கப்படும் என மெல்கம் கர்தினால் மற்றும் சமூக சுற்றாடற்துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர. ஆகவே அந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பது அவசியமாகும்.
வன பகுதி, சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமாயின் அப்பகுதிகளை மாத்திரம் உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும் என இப்பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற வகையில் வலியுறுத்துகிறேன். வர்த்தமானி அறிவித்தல் காரணமாக அப்பிரதேச மக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளதுடன் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
சுமார் 150 வருட காலமாக இருந்த பள்ளிவாசல், விகாரை மற்றும் கோயில், காணி ஆகியவை வர்த்தமானி ஊடாக இல்லாமல் போகும் என அச்சமடைந்துள்ளார்கள்.
ஆகவே 1998 ஆம் ஆண்டு 1,447 ஹெக்டயர் நிலப்பரப்பு அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே அந்த நிலப்பரப்பை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM