ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அரைசதம் அடிக்க நமீபியா நிர்ணயித்த 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 15.2 ஓவரில் பெற்ற இந்தியா அணி வெற்றியுடன் உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது.
இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்றில் இந்தியா 2 ஆவது பிரிவில் இடம் பிடித்திருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது.
நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம், அதிகாரப்பூர்வமாக இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது இந்தியா. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 133 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி துடுப்பெடுத்தாடியது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரோகித் சர்மா 37 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் - ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 86 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து கே.எல். ராகுல் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றது.
கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 25 ஓட்டங்களம் எடுக்க இந்தியா 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்து லீக் ஆட்டங்களில் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற நிலையில், இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.
இந்த போட்டியில் அரைச்சதம் கடந்த ரோஹித் சர்மா இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களை கடந்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அடுத்த தலைவர் இவரா ?
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி, இருபதுக்கு - 20 அணியின் அடுத்த அணித் தலைவர் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. சூப்பர் 12 சுற்று முடிவில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கே தகுதிபெறாமல் இந்திய அணி வெளியேறியதைவிட, விராட் கோலி இத்தொடருடன் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் என்ற தகவலை விராட் கோலி நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் நாணச்சுழற்சியில் வென்ற பிறகு பேசிய விராட் கோலி,
இந்திய அணியின் தலைவராக செயல்பட்டதில் மகிழ்ச்சி. அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.
ரோகித் அதற்காக காத்து கொண்டுள்ளார். இந்திய அணி சிறந்த நபரிடம் தான் செல்கிறது. அந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
எனவே, இந்திய இருபதுக்கு - 20 அணியின் அடுத்த தலைவராக ரோகித் சர்மா என்பதை விராட் கோலியே உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM