சீரற்ற காலநிலை தொடர்கிறது : 6 பேர் உயிரிழப்பு : 249 குடும்பங்கள் பாதிப்பு

09 Nov, 2021 | 06:32 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே அதிக மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்வதாகவும் , கண்டி, யாழ்ப்பாணம், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, முல்லைத்தீவு, கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சீரற்ற காலநிலை ஓரளவு குறைவடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டங்களில் நேற்று பிற்பகல் வரை 249 குடும்பங்களைச் சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை 12 வீடுகள் முழுமையாகவும் , 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள 63 குடும்பங்களைச் சேர்ந்த 251 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழைவீழ்ச்சி

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கு;ம அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும். இதன் போது ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் முன் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். 

புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 55 - 65 கிலோ மீற்றரை விட அதிகரிக்கக் கூடும்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தளை, குருணாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் அபாய எச்சரிக்கை இன்றைய தினமும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வான் கதவுகள் திறப்பு

இராஜாங்கனை, தெதுருஓயா, லக்ஷபான, மஹவிலச்சி, தப்போவ, பொல்கொல்ல, கொத்மலை, விக்டோரியா, நோட்டன் பிரிட்ஜ், அங்கமுவ மற்றும் துருவில ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ள எச்சரிக்கை

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் உயர்வடையும் பட்சத்தில் அத்தனகல்ல, கம்பஹா மற்றும் ஜாஎல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நதிகளின் நீர் மட்டம்

களு கங்கை, ஜின் கங்கை , நில்வளா கங்கை, மஹா ஓயா, அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடையக் கூடும் என்று தேசிய வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08