மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் நீரில் மூழ்கி பலி

By Gayathri

08 Nov, 2021 | 07:50 PM
image

புத்தளம் -முந்தல் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீன்பிடிப்பதற்காக முந்தல் குடியிருப்பு பகுதியிலுள்ள குளம் ஒன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற குறித்த நபர் அந்தக் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஒன்றுகூடி குளத்திற்குள் வீழ்ந்த குடும்பஸ்தரை பாதுகாப்பாக வெளியே எடுத்து, உடனடியாக முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்று அனுமதித்தபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:07:13
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57
news-image

அடையாள அணிவகுப்பைக் கோரிய பொலிசார் ;...

2022-09-29 21:56:10