பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலிருந்தும் உழவு இயந்திரங்களில் வந்த விவசாயிகள் மட்டக்களப்பு நகரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது விவசாயத்துக்குத் தேவையான யூரியா உரத்தினை உடனடியாக வழங்கக் கோரியும் அண்மையில் அமைச்சர் வெளியிட்ட கருத்தை கண்டித்தும் குறித்த போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர்.

பல தடைகளைத் தாண்டியும் பேரணியாக வந்த விவசாயிகள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

எங்களது ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணாத பட்சத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.