(எம்.மனோசித்ரா)
மேல் மாகாணத்திற்குள் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பிலும், சுகாதார விதிமுறைகளை முற்றாக மீறி செயற்படும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணிவரையான 2 மணித்தியாலங்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றி வளைப்பில் பேரூந்துகள், மக்கள் முகக்கவசம் அணிந்துள்ள முறைமை, காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகள், சில்லறை விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை கடைகள், ஏனைய சிறு விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இந்த சுற்றிவளைப்பிற்காக 478 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது 916 பேரூந்துகளும், 173 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளும், சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 1,220 பல்வேறு விற்பனை நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாமல் பயணித்த 421 பேரூந்துகள், 60 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும், 495 விற்பனை நிலை உரிமையாளர்களுக்கும் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM