ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

காலநிலை சீர்கேடு தொடர்பில் கிளாஸ்கோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டதீர்மானங்களை மூன்று மொழிகளிலும் சபைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என முன்னாள்பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க சபையில் கோரிக்கைவிடுத்தார்.

பாராளுமன்றம் திங்கட்கிழமை (8) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயேஇவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்கொட்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற காலநிலை சீர்கேடு தொடர்பில் கிளாஸ்கோமாநாட்டில் எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியும்கலந்துகொண்டிருந்தார்.

அதில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.ஜனாதிபதியும் அதில் கருத்து தெரிவித்திருந்தார். அதனால் அந்த மாநாட்டின் இறுதியில்முக்கிய தீர்மானங்கள் எடுத்திருக்கின்றன.

அதனால் அந்த தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்துக்குசமர்ப்பிக்கவேண்டும். அத்துடன் குறித்த அறிக்கையை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்மொழிபெயர்த்து சமர்ப்பிக்கவேண்டும்.

ஏனெனில் தமிழ் மொழியில் அந்த அறிக்கையைபெற்றுக்கொள்வது மிகவும் கடினமாகும். அதனால் அரசாங்கத்திடம் இருக்கும் அறிக்கையைமொழிபெயர்த்து சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பதிலளிக்கையில், காலநிலைசீர்கேடு தொடர்பில் கிளாஸ்கோ மாநாட்டில் எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திஜனாதிபதி கலந்துகொண்டது மாத்திரமல்லாது, இணைத்தலைமைத்துவம்வழங்கவும் நடவடிக்கை எடுத்திருந்தார். 

அத்துடன் அங்கு மேற்கொள்ளப்பட்டதீர்மானங்களை அவ்வாறே ஆரம்பமாக ஆங்கில மொழியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கநடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர் அதன் மொழிபெயர்ப்பை சபைக்கு சமர்ப்பிக்கநடவடிக்கை எடுப்போம் என்றார்.