ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்
அத்தியாவசிய 15பொருட்களுக்கான விலையை குறைத்து மக்களுக்கு குறைந்த விலைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அவ்வாறு இல்லாமல் நுகர்கோரை பலவந்தப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இடம்பெறுவதில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்
நுகர்வோர் வற்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு நுகர்வோரை வற்புறுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுதொடர்பில் வர்த்தக அமைச்சர் பதிலளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8 ) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வியின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,
சதொச நிறுவனத்தில் ஒருசில அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள சென்றால், அந்த பொருட்களை பெற்றுக்கொள்ள மேலதிகமாக ஐந்து பொருட்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என நுகர்வோர் பலவந்தப்படுத்தப்படுகின்றனர்.
யாராவது சீனி கொள்வனவு செய்வதற்கு மாத்திரம் சதொச நிறுவனத்துக்கு சென்றால், அவருக்கு அதனை பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்றது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு நுகர்வோரை பலவந்தப்படுத்தவதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுதொடர்பில் வர்த்தக அமைச்சர் பதிலளிக்கவேண்டும் என்றார்
இதற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன பதிலளிக்கையில், அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் 15வகைகளின் விலை குறைக்கப்பட்டு சதொச ஊடாக மக்களுக்கு விநியோக்க தீர்மானித்தோம்.
அதில் அரிசி, சீனி, போதுமை மா, பருப்பு என பல பொருட்கள் அடங்குகின்றன. அந்த பொருட்களை வேறு மொத்த விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொண்டால் ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாகவே இருக்கின்றது.
அதுதொடர்பான பற்றுச்சீட்டு ஒன்றையும் நான் ஊடக சந்திப்பின்போது காட்டினேன். அதன்போது சதொச ஊடாக இந்த பொருட்களை பெற்றுக்கொள்ளும்போது குறைந்தபட்சம் 5பொருட்களையாவது பெற்றுக்கொள்வதன் மூலம் நுகர்வோருக்கு அதிக நன்மை கிடைக்கின்றது என தெரிவித்தேன்.
என்றாலும் இதனை வேறுவிதமாக பிரசாரம் செய்ய சிலர் முயற்சித்தனர். அதாவது சீனி அல்லது அரிசி எடுப்பதாக இருந்தால் வேறு 5பொருட்கள் கொள்வனவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனால் மறுநாள் மீண்டும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, நுகர்வோருக்கு விரும்பிய பிரகாரம் சதொச ஊடாக பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.
1998 என்ற துரித இலக்கத்துக்கு அழைத்தால் வீட்டுக்கே பொருட்களை கொண்டுவந்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றாேம் என தெரிவித்தேன். அதனால் யாருக்கும் எந்த வற்புறுத்தலும் இல்லை. நுகர்வோருக்கு தேவையான அத்தியாவசியமான 15 பொருட்களை சதொச ஊடாக குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM