2 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல முடியாது : விரைவில் சட்டம் என்கிறார் சுகாதார அமைச்சர்

Published By: Digital Desk 2

08 Nov, 2021 | 07:15 PM
image

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

நீண்டகால ஆய்வுகளுக்கு உட்படுத்தாமலேயே கொவிட் வைரஸ் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. இதில் பக்க விளைவுகளை கருத்தில் கொள்ளாது உயிரிழப்பை தடுக்கும் பிரதான நோக்கத்திலேயே தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றதென சபையில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, 

இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு பயணிக்க முடியாது என்ற சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாகவும், விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8 ) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், கொவிட் வைரஸ் தடுப்பூசியின் தரம் குறித்து ஒருசில சர்வதேச அமைப்புகள் வெளிப்படுத்தும் தரவுகள் குறித்து ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கேள்வி எழுப்பினார். 

பைசர், மொடர்னா, ஜோன்சன் அன் ஜோன்சன் ஆகிய தடுப்பூசிகளின் தரம் குறைவாகியுள்ளதாக சர்வதேச நிறுவனமொன்று கருத்து வெளியிட்டுள்ளது.

இது உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்ட காரணியா? இலங்கையின் சுகாதார அமைச்சு இது குறித்து எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில்,

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான நிதி எம்மிடம் இல்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. ஆனால் நாம் வேகமாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நாடாக உள்ளோம்.

சகல தடுப்பூசிகளையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல் ஆய்வுகளை பொறுத்தவரை ஒரு தடுப்பூசியின் தரம் குறித்து குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது முறையான ஆய்வுகளை மேற்கொண்டே பெறுபேறுகள் வெளியிடப்படும்.

ஆனால் உலகில் ஏற்பட்ட அவசரகால நிலைமையினாலும் மக்களின் இறப்பை கருத்தில் கொண்டும் அவசர நிலைமைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் கூட உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டது.

தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அங்கீகரித்த பின்னர் அது குறித்து தர்க்கம் செய்ய வேறு இடம் இல்லை. 

கொள்கை ரீதியில் வெவ்வேறு அறிக்கைகள் ஆய்வுகளில் வெளிப்படலாம். ஆனால் இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்துடன் ஒருபோதும் ஒத்துப்போகாது.

ஆய்வுகளின் தரவுகளை நாம் தட்டிக்கழிக்க முடியாது. அதற்காக எம்மால் தடுப்பூசி இல்லாது பயணிக்கவும் முடியாது. ஒரு சில நாடுகள் இப்போது வில்லைகளை கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு பல ஆய்வுகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் அவதானித்துக்கொண்டுள்ளோம், ஆனால் தடுப்பூசி ஏற்றும் உலக நாடுகளின் தீர்மானத்தில் இருந்து மாறுபட்டு எம்மால் பயணிக்க முடியாது. 

மத ரீதியிலும், அமைப்பு ரீதியிலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. அதேபோல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு பயணிக்க முடியாது தடுக்க முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கேட்டிருந்தேன்.

அவ்வாறு செய்ய முடியும் என சட்டமா அதிபர் பதில் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியில் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சட்ட ரீதியாக இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உலகில் பல நாடுகள் இந்த செயற்பாடுகளை கையாண்டு வருகின்றன. 

ஆகவே சுகாதார அமைச்சின் ஊடாக , தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் செயலி ஒன்றினை உருவாக்கவும், தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்காத நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கும் நீதிமன்றத்தை நாடுவார்கள், ஆனால் அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராக உள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01