பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு எடுத்துவருவது தொடர்பான அச்சுறுத்தல் இருக்கின்றதா ? : பொன்சேகா சபையில் பரபரப்புக் கேள்வி

Published By: Digital Desk 2

08 Nov, 2021 | 07:10 PM
image

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு கொண்டுவருவது தொடர்பாக ஏதாவது புலனாய்வு தகவல்கள் இருக்கின்றதா. அவ்வாறு இருந்தால் அரசாங்கம் அதுதொடர்பில் எம்மை அறிவுறுத்தவேண்டும் என பீல்மாஷல் சரத் பொன்சேகா சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8 ) வாய்மூல விடைக்கான கேள்வி  இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், சபைக்கு வந்த சரத் பொன்சேகா ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என தெரிவித்து எனது மேசையில் அறிக்கை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது.

அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் தினங்களில் பாராளுமன்றத்துக்குள் வரும்போது அவர்கள் சரீர பாதுகாப்புக்கு ஆளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலத்தில் உலகில் நவீன தொழிநுட்ப கருவிகள் இருக்கின்றன. அவ்வாறான நிலையில் உடலில் துப்பாக்கிகள் அல்லது வேறு ஆயுதங்கள் இருக்கின்றதா என பரிசோதித்து பார்க்க உடலை தடவிப்பார்ப்பதில்லை.

அதனால் பாராளுமன்றம் என்பது உயர்ந்த சபையாகும். இந்த இடத்துக்கு வருபவர்களின் உடல் பரிசோதனையை  கைகளால் தடவிப்பார்க்காமல், அதற்கு வேறு முறையொன்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் திடீரென இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வருவதற்கு பாராளுமன்றத்துக்கு குண்டுகொண்டுவருவதாக ஏதாவது அச்சறுத்தல் இருப்பதாக புலனாய்வு தகவல்கள் இருக்கின்றதா?. அவ்வாறான தகவல் இருக்குமாக இருந்தால் அது தொடர்பில் எம்மையும் அறிவுறுத்தவேண்டும்.

அவ்வாறான தகவல்களை மறைத்துக்கொண்டு இதனை மாத்திரம் செய்ய முடியாது. இதுதொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில், 

பீல்மார்ஷல் சரத்பொன்சேகா முன்வைத்த கருத்து முக்கியமானது. என்றாலும் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக  நான் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21