இலங்கை கிரிக்கெட் அணி குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் பாராளுமன்றில் புகழாரம்

08 Nov, 2021 | 01:45 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை கிரிக்கெட் அணியின்  நிலைமையை பார்க்கும் போது திருப்திகரமாக உள்ளது.  

ஐந்து ஆண்டுகளுக்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம், அதன் வெளிப்பாடு நன்றாக அமைந்துள்ளது. 

அடுத்த 15 ஆண்டுகளுக்கு பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (8) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னேற்றகர செயற்பாடுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை அணியின் கடந்த கால நிலைமையுடன் ஒப்பிடுகையில் தற்போது நல்லதொரு முன்னேற்றம் காணப்படுகின்றது. 

ஆரம்பத்தில் ஒருபுறம் பயிற்ச்சியாளர்களின் நெருக்கடி நிலைமை மற்றும் வீரர்களின் ஒழுக்கம் என்பன பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியது.

அதனால் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. இது குறித்த விமர்சனங்களும் எழுந்தன, எனினும் இப்போது இலங்கை அணியின் நிலைமையை பார்க்கும் போது திருப்திகரமாக உள்ளது. எமது பயணம் நீண்டது, ஆனால் இப்போது அதற்கான நல்லதொரு அடித்தளம் போடப்பட்டுள்ளது.

குறைபாடுகள் உள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் இம்முறை 20க்கு 20 தொடரில் எமது அணியும், தலைவரும் சரியான தீர்மானங்களை எடுத்தனர். 

ஆனால் வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் யதார்த்தம். இந்தியா அணியே இம்முறை உலக கிண்ணத்தை வெற்றிகொள்ளும் என பலர் கூறினர், அவர்களும் எம்முடன் வெளியேறியுள்ளனர்.

அனுபவம் மிக்க பலமான அணியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி காணப்பட்ட போதும் அவர்கள் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே விளையாட்டில் எதிர்வுகூறல்களுக்கு அப்பாலான தெளிவு அவசியம்.

எவ்வாறு இருப்பினும் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம், அதன் வெளிப்பாடு நன்றாக அமைந்துள்ளது. 

அடுத்த 15 ஆண்டுகளுக்கு பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அதேபோல் வீரர்களின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது, ஏற்கனவே மூன்று வீரர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த ஆண்டில் மீண்டும் தெரிவாகலாம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15