காத்திரமான முதல் காலடி

By Digital Desk 2

08 Nov, 2021 | 12:13 PM
image

சி.அ.யோதிலிங்கம்

கடந்த 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திண்ணை விடுதியில் 13ஆவதுதிருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூட்டாகக் கோரும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின்ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன்,சுரேஸ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, ரவூப்ஹக்கீம், மனோகணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அவரின்சார்பில் கட்சியின் பொருளாளர் பேராசிரியர் சிவநாதன் கலந்து கொண்டார். 

பிரதான தமிழ்த்தேசியக்கட்சிகளானஇலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இதில் கலந்து கொள்ளவில்லை.விக்கினேஸ்வரனின் கூட்டணியிலுள்ள அனந்தி சசீதரனின் ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகமும் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாதது எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான். 

அக்கட்சி வெளிப்படையாகவே 13ஆவது திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக்கூட இருக்க மாட்டாது எனக் கூறி வருகின்றது. ஆனால் 13ஆவது திருத்தம் அரசியல் தீர்வின்ஆரம்பப் புள்ளியாக இருக்கும் அது முழுமையாக நிறைவேற்றப்படல் வேண்டும் எனக்கூறிவரும்தமிழரசுக்கட்சி கட்சி இதில் கலந்து கொள்ளாதது தான் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அனந்திதான் ஒரு தளபதியின் துணைவியாக இருந்து கொண்டு 13ஆவது திருத்தத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

ரெலோ ஒழுங்கு செய்த கூட்டத்தில் மூத்தகட்சியான தமிழரசுக்கட்சி எவ்வாறுகலந்து கொள்வது என்ற ‘ஈகோ’ பிரச்சினை அதற்கு காரணமாக இருக்கலாம். முஸ்லிம் காங்கிரஸ்தலைவர் ரவூப் ஹக்கீமை கலந்து கொள்ள வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்கேட்டதாகவும்  ஒரு தகவல். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-07#page-22

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right