சுபத்ரா

“உர விவகாரத்தில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள உரசல் நிரந்தரமானதோ, பெரும் பிளவுகளை ஏற்படுத்தக் கூடியதோ அல்ல.என்றாலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் உச்சபட்சமான உறவும், விட்டுக்கொடுத்துப்போகும் தன்மையும், இருப்பதாக காணப்பட்ட மாயை  உடைந்து போயிருக்கிறது” 

சீன சேதன உரத்தை நம்பி அரசாங்கம் எடுத்த முடிவுகள் அதனை இக்கட்டான நிலைக்குத் தள்ளி விட்டுள்ளது.

இரசாயன உரத்துக்கு தடைவிதிக்க முன்னரே, சீனாவில் இருந்து போதிய சேதன உரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற வாக்குறுதியை அரசாங்கம் பெற்றிருப்பதாககூறப்படுகிறது.

அந்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, இரசாயன உரத்துக்கான தடையை விதித்த அரசாங்கம், இப்போது விவசாயிகளுக்கும்பதிலளிக்க முடியாமல், சீன உரத்தையும் இறக்குமதி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

இரசாயன உரத்தை தடை செய்வதற்கும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும்சமநேரத்தில் திட்டமிட்டது அரசாங்கத்தின் திட்டமிடல் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

டொலர்கள் பற்றாக்குறையினால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டிருந்த அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில், இரசாயன உர இறக்குமதியை தடை செய்து விவசாயிகளை குழப்பத்துக்குள் தள்ளியது.

தொடர்ச்சியாக இரசாயன உரத்துக்குப் பழக்கப்பட்டுப்போன நிலத்தை, இயற்கை உரத்துக்கேற்ற வகையில் மீளத் திருப்புவதற்கு குறிப்பிட்ட காலம் தேவை.

அதையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. உள்நாட்டு உற்பத்தி நெருக்கடியையும்அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை.

இரசாயன உரத்தை தடை செய்யும் போது உற்பத்தியிழப்பு  ஏற்படும் என்பதையும், விவசாயிகள் உற்பத்தியில் நாட்டம் கொள்ளமாட்டார்கள் என்பதையும் கூட அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-07#page-23

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.