பிரதமர் தலைமையில் பங்காளிக்கட்சிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை

Published By: Digital Desk 9

08 Nov, 2021 | 11:07 AM
image

(ஆர்.யசி)

அரசாங்கத்திற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள், வரவு-செலவு  திட்டத்தின்போது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் தீர்மானங்கள் எடுப்பதை தடுக்கும் விதமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பங்காளிக்கட்சிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகள் மற்றும் பங்காளிக்கட்சிகள் மீதான அவதூறு, விமர்சனக் கருத்துக்களை ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் வன்மையாக கண்டித்து வருகின்றதுடன் அரசாங்கத்தில் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். 

பங்காளிக்கட்சிகளை பொருட்டாக கருதாது தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களில் தம்மை புறக்கணித்து வருவதாகவும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறே தொடருமானால் தாம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அதேபோல் கெரவலப்பிட்டி உடன்படிக்கை விடயத்திலும், அமைச்சரவைக்குள் எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பிலும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை கடுமையாக சாடியுள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனும் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.  

அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், தனித்து தீர்மானம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையில் தற்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள நிலையில் அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள நெருக்கடிகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகியுள்ளார். 

 

இந்த வாரத்தில் சகல பங்காளிக்கட்சிகளுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தில் பிரதான கட்சிக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை தீர்க்கவும், ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அரசாங்கத்தை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45