இலங்கை - மாலைதீவுகள் போட்டியுடன் பிரதமர் கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டம் இன்று ஆரம்பம்

08 Nov, 2021 | 02:29 PM
image

(என்.வீ.ஏ.)

பங்களாதேஷ், மாலைதீவுகள், சிஷெல்ஸ், இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (8) இரவு 9.00 மணிக்கு நடைபெறும் ஆரம்ப விழாவுடன் தொடங்கவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் இப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி இலங்கையில் மீண்டும் கால்பந்தாட்டம் உயரிய நிலையை அடைவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணிக்கும் சிஷெல்ஸ் அணிக்கும் இடையில் ஆரம்பப் போட்டி நடைபெறும்வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தபோதிலும் சிரற்ற காலை நிலை காரணமாக அப் போட்டியை ஒரு தினத்தால் பிற்போட நேரிட்டதாக அவர் மேலும் கூறினார்.

அதேவேளை இலங்கைக்கும் மாலைதீவுகளுக்கும் இடையிலான போட்டி ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து மின்னொளியில் இன்று இரவு நடைபெறும்.

மாலைதீவுகளில் கடந்த மாதம் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் மாலைதீவுகளுக்கு பலத்த சவாலாக விளங்கி 0 - 1 என்ற கோல் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை, தனது சொந்த மண்ணில் முதல் தடவையாக மாலைதீவுகளை வெற்றிகொள்ள முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை அணி மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பங்குபற்றும் என தலைமைப் பயிற்றுநர் அமிர் அலாஜிக் தெரிவித்தார்.

'மாலைதீவுகளில் நடைபெற்ற சாவ் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறாதபோதிலும் அதன் திறமையில் முன்னேற்றம் காணப்பட்டது.

அந்த சுற்றுப் போட்டியில் கற்றுக்கொண்ட படிப்பினைகளைக் கொண்டு திறமையாக விளையாட முயற்சிப்போம். ஆனால், நான் எப்போதும் கூறுவதுபோல் நீ;ண்ட பயணத்தைத் தொடரவேண்டியுள்ளது' என்றார் அலாஜிக்.

கத்தாரில் நடைபெற்ற 23 வயதின் கீழ் ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியில் இடம்பெற்ற சில வீரர்கள் தேசிய அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனதாக அவர் கூறினார்.

ஆனால், அவர்கள், சர்வதேச மட்டத்தில் விளையாடும் அளவுக்கு போதிய அனுபவத்தைப் பெறவில்லை. எனவே இந்த சுற்றுப் போட்டியில் கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இப் போட்டியை முன்னிட்டு சிறிது காலமே பயிற்சியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்ட அணித் தலைவர் சுஜான் பெரேரா, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, சாவ் சம்பியன்ஷிப் ஆகியவற்றில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு முழுத் திறமையுடன் விளையாடி வெற்றிபெற முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக ஏற்றிக்கொண்ட இரசிகர்கள் இப் போட்டிகளைக் கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் அரங்கில் 50 வீத பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

லீக் அடிப்படையில் நடத்தப்படும் இந்த சுற்றுப் போட்டியில் சம்பயினாகும் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்துடன் 30,000 டொலர் பணப்பரிசு வழங்கப்படும்.

திங்கட்கிழமை இரவு நடைபெறவுள்ள ஆரம்ப விழா வைபவத்தின்போது மாலைதீவுகள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலிஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட விசேட பிரமுககர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

திங்கட்கிழமை ஆரம்பமாகும் லீக் போட்டிகள் தொடர்ந்து 9, 11, 14ஆம் திகதிகளில் நடைபெறுவதுடன் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜனவரி 19ஆம் திகதி நடைபெறும்.

அன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்குவார். சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ விசேட அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35