(எம்.மனோசித்ரா)

சிறுவர்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் தொற்று பரவும் வீதம் மிகக் குறைவாகும். அதேபோன்று சிறுவர்களிடமிருந்து பெரியவர்களுக்கு தொற்று பரவும் வீதமும் மிகக் குறைவாகும். 

எனவே மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியத்துவமுடையதாகும். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மாத்திரமின்றி அனைத்து துறைகளினதும் முன்னேற்றத்திற்கு சிறந்த கல்வி அத்தியாவசியமானதாகும்.

சிறுவர்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் தொற்று பரவும் வீதம் மிகக் குறைவாகும். அதேபோன்று சிறுவர்களிடமிருந்து பெரியவர்களுக்கு தொற்று பரவும் வீதமும் மிகக் குறைவாகும். 

எனவே மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

மாறாக தமது பிள்ளைகளுக்கு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுதை பழக்கப்படுத்தி, அவை பாடசாலைகளில் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுமாயின் மாணவர்கள் மத்தியில் கொவிட் பரவுவதை தவிர்க்க முடியும். 

தற்போது கற்பித்தல் செயற்பாடுகளில் சில வரையறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரங்களுக்கும் இந்த வரையறைகள் நடைமுறைப்படுத்தப்படுமாயின், வெகுவிரைவில் விளையாட்டு உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.