(துபாயிலிருந்து நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ள இந்தியா, துபாய் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள தனது கடைசி சுப்பர் 12 சுற்று போட்டியில் ஆறுதல் வெ;றறியீட்டி நாடு திரும்ப எண்ணியுள்ளது.
மேலும் ரவி ஷாஸ்திரி - விராத் கோஹ்லி ஆகியோரின் பதவிகளுக்கு இந்தியா வெற்றியுடன் விடை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய பலம்வாய்ந்த அணிகளிடம் தோல்வி அடைந்த இந்தியா, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளை மிக இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.
ஆனால், ஆப்கானிஸ்தானை நியூஸிலாந்து வெற்றிகொண்டதும் இந்தியாவின் அரை இறுதி கனவு கலைந்துபோனது.
இந் நிலையில் சுப்பர் 12 சுற்றுக்கான கடைசி நாளான இன்று நடைபெறும் போட்டி இருபது 20 அணித் தலைவராக விராத் கோஹ்லிக்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராக ரவி ஷாஸ்திரிக்கும் கடைசிப் போட்டியாக அமையவுள்ளது.
இருபது 20 அணித் தலைவர் பதவியிலிருந்து விராத் கோஹ்லி விலகுகின்றபோதிலும் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு தொடர்ந்தும் தலைவராக செயற்படவுள்ளார்.
இம் முறை இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பிரகாசிக்கத் தவறியைம இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
துடுப்பாட்டத்தில் கே.எல். ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரே 100 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளனர். பந்துவீச்சில் ஒருவருமே 10 விக்கெட்களை நெருங்கவில்லை.
நமிபியாவைப் பொறுத்த மட்டில் இன்றைய போட்டியில் வெற்றிபெறுவது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாகும். எனினும் அவ்வணி கடந்துவந்த பாதையை நோக்கும்போது இந்தியாவுக்கு சவால் விடுக்கக்கூடும் என கருதப்படுகின்றது.
முதல் சுற்றில் நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளையும் சுப்பர் 12 சுற்றில் ஸ்கொட்லாந்தையும் நமிபியா வெற்றிகொண்டிருந்தது.
நமிபிய அணியில் டேவிட் வைஸ், அணித்தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ், க்ரெய்க் வில்லியம்ஸ், ஜேன் ப்ரைலின்க், ரூபன் ட்ரம்ப்ல்மான் ஆகியோர் பெரும் பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM