முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

இவர் இன்று (23) பகல்  ஒரு மணியளவில் ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும்  ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.