மீண்டும் அதிகரிக்கிறது கொவிட் -19 ! அவதானமாக செயற்படவேண்டும் என்கிறார் வைத்தியர் அன்வர் ஹம்தானி

07 Nov, 2021 | 08:41 PM
image

(ஆர்.யசி)

நீண்டகால முடக்கத்தின் பின்னர் கொவிட் வைரஸ் தொற்றுப்பரவல் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தாலும் கூட மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில தினங்களில் ஐந்து வீதத்தால் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும்  சுகாதார அமைச்சின் கொவிட் வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

கடந்த 43 நாட்கள் பொது முடக்கத்தின் பின்னர் நாடு திறக்கப்பட்ட நிலையில் தற்போது நாட்டில் கொவிட் வைரஸ் தாக்கங்கள் குறித்த இறுதி அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

 அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார தரப்பின் அறிக்கையின் பிரகாரம் நாட்டில் வைரஸ் பரவல் நிலைமைகள் முழுமையாக கட்டுப்பாட்டில் வரவில்லை. 

இவ்வாறான மிக மோசமான வைரஸ் தொற்றுகள் விரைவாக கட்டுப்பாட்டுக்குள் வராது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. அடுத்த பாரிய அலையொன்று உருவாகிக்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான நிலையில் நாமும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

இலங்கையில் தற்போது வரையில் டெல்டா வைரஸ் தொற்று பரவிக்கொண்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்கள் நாட்டை முடக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட வேளையில் டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது. 

ஆனால் கடந்த சில தினங்களில் மீண்டும் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வார காலத்திற்குள் ஐந்து வீதத்தால் கொவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. 

எனவே எம் முன்னால் உள்ள அச்சுறுத்தல் நிலைமைகளை கருத்தில் கொண்டே சகலரும் செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே எம்மால் தொடர்ச்சியாக கூற முடியும். 

முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை பின்பற்றுதல் , பொதுப்போக்குவரத்து பயன்பாட்டின் போதும் கூடிய கவனம் எடுத்தல், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளில் கூடிய அக்கறை கொள்ளல் போன்ற விடயங்களில் பொது மக்கள் அக்கறை செலுத்த வேண்டும். 

அதேபோல் அனாவசிய ஒன்றுகூடல்கள், பயணங்களை தவிர்ப்பது இப்போதுள்ள நிலைமையில் ஆரோக்கியமானதாக அமையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56
news-image

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் “ஹரக் கட்டா”...

2025-03-26 15:20:15
news-image

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை...

2025-03-26 15:16:57
news-image

யோஷித ராஜபக்ஷ : இரவு நேர...

2025-03-26 15:02:06
news-image

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம் 

2025-03-26 14:55:42