ஆவேசத்தாலும் ஆக்ரோசத்தாலும் நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கிக்கொண்டு செல்ல முடியாது - சஜித் பிரேமதாச

07 Nov, 2021 | 08:25 PM
image

(எம்.மனோசித்ரா)

ஆவேசத்தாலும் ஆக்ரோசத்தாலும் நாடு இருக்கின்ற நிலையில் இருந்து நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து, மனித வளத்தை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதன் மூலமே எமது நாடு முன்னேற முடியும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.  

ஞாயிற்றுக்கிழமை (7) திஸ்ஸமஹாராம இணை அமைப்பாளர் டி.வி.கே.காமினியின் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எமது வேலைத்திட்டம் அனைத்தும் சுபீட்சமான நாடும் சௌபாக்கிய மிக்க தேசமாகும் என்றும் அது ஒருதரப்பினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்காது. 

நாட்டின் ஒட்டு மொத்த குடிமக்களையும் அடிப்படையாக கொண்டதாக அமையும் வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படும்.

உணர் திறனும், நாட்டின் மீது அக்கறையும், நேரடியான வேலைத்திட்டமும், மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும், இதயமும் நல்லுள்ளமும் கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். மக்கள் மயப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டமே இன்று நாட்டின் தேவையாக இருக்கின்றது.

ஆவேசத்தாலும் ஆக்ரோசத்தாலும் நாடு இருக்கின்ற நிலையில் இருந்து நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. 

நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து, மனித வளத்தை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதன் மூலமே எமது நாடு முன்னேற முடியும்.

பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியுமாக அமைவது ஆவேசம், வைராக்கியம், குரோதம் போன்ற செயற்பாடுகளால் அன்றி கலந்துரையாடல், கருத்துப்பரிமாற்றத்தில் இணக்கம் காணல், கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், ஜனநாயகம் போன்ற மனிதாபிமான மற்றும் நெறிமுறைக் கொள்கைகள் மூலமேயாகும்.

 தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அறிந்து வைத்துள்ளதால் அது தொடர்பில் பேசுவதில் பயனில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right