(எம்.மனோசித்ரா)

குருணாகல் - ஹெட்டிபொல பொலிஸ் பிரிவில் கொன்வௌ பிரதேசத்தில் தலையில் வெட்டுக்காயத்துடன் வீட்டிக்குள் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று சனிக்கிழமை ஹெட்டிபொல பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 37 வயதுடைய கொன்வௌ, மடங்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் மனைவி அவருடனான முரண்பாட்டின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில, குறித்த நபர் வீட்டில் வீட்டில் தனியாகவே இருந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இன்றுவரை எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஹெட்டிப்பொல பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.