கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு 1.3 மில்லியன் நிதியுதவி

Published By: P. Saranya

07 Nov, 2021 | 07:59 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளுதல் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக அடிப்படை சுகாதாரக்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தல் என்பவற்றுக்காக இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாகக் கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட 10 நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக உதவுவதற்கென கனேடிய அரசாங்கத்தினால் இவ்வருடம் மார்ச் மாதத்திலிருந்து 23.86 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுகாதார அமைச்சு மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகம் என்பன இணைந்து மேற்படி நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்திட்டமொன்றைத் தயாரித்தன. அச்செயற்திட்டத்தில் கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் சுகாதாரத்துறையில் மேலும் குறிப்பிடத்தக்களவான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு விசேடமாகக் கருத்திற்கொள்ளப்படவேண்டிய காரணிகள் தொடர்பில் குறிப்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

'கூட்டிணைவு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடலின் ஊடாக கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கு அவசியமான உதவிகளை இலங்கைக்கு எம்மால் உரியநேரத்தில் வழங்கமுடிந்திருக்கின்றது' என்று இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மெக்கினொன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அலகா சிங், 'கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியை உரியவாறு கையாள்வதுடன் அதிலிருந்து மீட்சியடையவேண்டிய நிலையில் இலங்கை உள்ளபோது கனேடிய அரசாங்கத்தினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதுமாத்திரமன்றி நிதியுதவியை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கையாள்வதில் எமக்கு வழங்கப்பட்ட சுதந்திரமும் பெரிதும் பாராட்டப்படவேண்டிய விடயமாகும்' என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத்...

2026-09-12 17:44:08
news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07