என்.கண்ணன்

“விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராகுவதற்கு பங்காளிக் கட்சிகள் இணங்க வேண்டும். அதேநேரம்  பங்காளிக் கட்சிகளுக்குள்ளேயும், முதலமைச்சர் கனவுகளுடன் பலர் இருக்கின்றனர்”

மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்றும், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று, இலங்கையிடம் வலியுறுத்துமாறு இந்தியாவைக் கோருகின்ற முயற்சிகளைத் தமிழ்க் கட்சிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றன.

அதேநேரத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால்,முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டியும் இப்போதே தொடங்கி விட்டது.

தெற்கில் பலர்,  அமைச்சர் பதவிகளை விட்டு விலகி, முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இறங்க காத்திருப்பது போலவே- வடக்கிலும் அவ்வாறான முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா வேட்பாளராக நிறுத்தப்படும், வாய்ப்புகள் உள்ளன.

ஏனைய பிரதான கட்சிகள் மத்தியில் கவர்ச்சியான வேட்பாளர்கள் யாரும் இப்போது வெளிப்படையான போட்டியில் இல்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில், கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும், பாராளுமன்றம் சென்று விட்ட நிலையில், அடுத்த கட்டத் தலைவர்களையே அது நம்பியிருக்கிறது.

ஈ.பி.டி.பி. மீண்டும் தவராசாவையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப் போவதாக தகவல்கள் கசிகின்றன.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி யாரை நிறுத்தப் போகிறது என்ற கேள்விக்கு குழப்பமான பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதற்குக் காரணம் அந்தக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமானசி.வி.விக்னேஸ்வரன் தான்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-07#page-23

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.