ஒரு போட்டியில் தங்கியிருக்கும் 3 அணிகளின் தலைவிதி

07 Nov, 2021 | 03:14 PM
image

(துபாயிலிருந்து நெவில்  அன்தனி)

நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அபு தாபியில் இன்று நடைபெறவுள்ள குழு 2 க்கான இருபது 20 உலக்க் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி 3 அணிகளின் தலைவிதியை தீரமானிக்கவள்ளது.

நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று அணிகளில் எந்த அணி இக் குழுவிலிருந்து அரை இறுதியில் பாகிஸ்தானுடன் இணையும் என்பதை இன்றைய போடடி பெரும்பாலும் தீர்மானிக்கும்.

குழு 1 இலிருந்து இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் இருபது 20 உலகக் கிண்ண இருபது 20 கிரிக்கெட்டின் அரை இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் குழு 2இலிருந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெறவுள்ள 2ஆவது அணி எது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இக் குழுவுக்கான அணிகள் நிலையில் 2ஆம், 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள நியூஸிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடையே 2ஆம் இடத்துக்கான போட்டி நிலவுகின்றது.

எனவே அபு தாபியில் இன்று நடைபெறவுள்ள போட்டியை முழு உலகமும் குறிப்பாக இந்தியா மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

இப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் இந்தியாவினதும் ஆப்கானிஸ்தானினதும் அரை இறுதியில் நுழைவதற்கான எதிர்பார்ப்பு தகர்ந்துவிடும்.

ஆனால், நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டால் இந்த இரண்டு அணிகளின் நிலைகள் நிகர ஓட்ட வேகத்தில் தீர்மானிக்கப்படும். நியூஸிலாந்தை வெற்றிகொள்ளும் அதேவேளை மிகப் பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே ஆப்கானிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பை பெறுவதற்கான சொற்ப வாய்ப்பு கிடைக்கும். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தமட்டில் நிகர ஓட்ட வேகம் மிக முக்கியமாகும்.

ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டினால், தனக்கு சாதகமாக அமையக்கூடிய நிகர ஓட்ட வேகத்தைத் திட்டமிடுவதற்கு இந்தியாவுக்கு போதிய கால அவகாசம் இருக்கின்றது. எனவே கணிப்பீடுகளை சரியாக செய்துகொண்டு இந்தியா நாளை நடைபெறவுள்ள கடைசி சுப்பர் 12 சுற்று போட்டியில் நமிபியாவை எதிர்த்தாடும் என எதிர்பார்க்கலாம். ஒருவேளை, மட்டுமட்டான நிகர ஓட்ட வேகத்துடன் இந்தியா வெற்றிபெற்றால் அரை இறுதி வாய்ப்பு அற்றுப்போகும்.

அதேவேளை, நியூஸிலாந்தினதும் ஆப்கானிஸ்தானினதும் நிகர ஓட்ட வேகம் அவற்றில் எந்த அணி அரை இறுதிக்கு செல்லும் என்பதைத் தீர்மானிக்கும்.

பாகிஸ்தான் - ஸ்கொட்லாந்து

இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிச் சுற்றுக்கு முதலாவது அணியாக தகுதிபெற்றுக்கொண்ட பாகிஸ்தான் இன்று இரவு நடைபெறவுள்ள குழு 2க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.

இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அரை இறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06