சகோதரர்களுக்கு  அறிவுரை கூற ஆரம்பித்துள்ளாரா  பிரதமர் மஹிந்த? 

By Digital Desk 2

07 Nov, 2021 | 05:04 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் தொடர்பில் ஒரு பக்கம் சர்ச்சைகள் எழுந்திருக்கும்நேரத்தில் அதில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் இல்லையென்ற வினா மறுபக்கம் சிறுபான்மை தமிழ் கட்சிகளிடமிருந்துஎழுந்திருந்தது. 

எனினும் இது குறித்து அமைச்சர் டக்ளஸ் மற்றும் பிரதமரின்  இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர்  ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தியதையடுத்துதமிழ் உறுப்பினர்கள்மூவரை  இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அதன் படி வடக்கு,கிழக்கு மற்றும் மலையக  பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவரை   தேர்வு செய்யும் பொறுப்பு அமைச்சர் டக்ளஸ் மற்றும்  செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. எனினும் இது தொடர்பில் அனுபமிக்க கல்வியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள்சிலரை அணுகிய போதும் அவர்கள் இந்த செயலணியில்  உறுப்பினராக இணைந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதாகவேஎமக்குக் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.  

ஞானசார தேரர் தலைமையிலான மேற்படி 13 பேர் கொண்ட செயலணியில்,  9 சிங்கள உறுப்பினர்களும் 4 முஸ்லிம் உறுப்பினர்களும் அடங்குகின்றனர். 

தமிழர்களை சேர்க்காதிருப்பது கூட பிரச்சினையில்லை,ஆனால் நீதிமன்றத்தால்குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து பின்னர் ஜனாதிபதியால் பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரரை இதற்கு தலைவராக நியமித்தமையே ஆளுங்கட்சியில்அங்கம் வகிக்கும் பலரையும் முகஞ்சுளிக்க வைத்துள்ளது.  

மேலும் இதில் தமிழ் உறுப்பினர்கள்எவரும் அங்கம் வகிக்க விரும்பாததற்கான காரணம் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் என்ன அர்த்தம் என்பது குறித்து இதுவரை ஜனாதிபதியோ அரசாங்கமோ விளக்கமளிக்கவில்லை.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-07#page-26

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right