கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஸ்கேனிங் சிகிச்சை பிரிவில் போதிய வைத்தியர்கள் இன்மையால் சிகிச்சை மேற்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஸ்கேனிங் சிகிச்சை பிரிவில் போதிய வைத்தியர்கள் இன்மையால் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மாத்திரம் ஸ்கேனிங் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன
குறிப்பாக பிற்பகல் 4 மணிக்கு பின்னர் சிகிச்சைகள் இடம்பெறுவதில்லை அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது இதனால் திடீர் விபத்துக்களில் காயமடைந்தவர்கள் இதர நோய்வாய்ப்பட்டு வருபவர்கள் உடனடியாக வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படும் நிலை கானப்படுகின்றது.
அத்துடன் ஸ்கேனிங் சிகிச்சை பெறவேண்டிய நோயாளர்கள் வைத்தியசாலை விடுதிகளில் குறிப்பிட்ட சில நாட்கள் தங்கி நிற்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
மாவட்ட பொது வைத்தியசாலையில் இதுவரைகாலமும் கடமையிலிருந்த சிரேஸ்ர வைத்தியர் ஒருவருக்கு பதிலாக மற்று மொருவரை நியமிக்காத நிலையில் குறித்த சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட வைத்தியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கியதால் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளதாக அறிய முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM