(துபாயிலிருந்து நெவில் அன்தனி)
அபு தாபியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற குழு 1 க்கான இருபது 20 உலகக் கிண்ண இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றி மூலம் 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.
எனினும் இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி முடிவிலேயே அவுஸ்திரேலியா அரை இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்ட்ங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாகப்பெற்று வெற்றியீட்டியது.
4 ஆவது ஓவரில் அணித் தலைவர் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியா 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆனால், டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ் ஆகிய இருவரும் 2 ஆவது விக்கெட்டில் 75 பந்துகளில் 122 ஓட்டங்களை வேகமாகப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை வெற்றி பெறச்செய்தனர்.
டேவிட் வோர்னர் 56 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 9 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்களுட்ன ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைக் குவித்தார். மிச்செல் மார்ஷ 32 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களை விளாசினார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் கீரன் பொலார்ட் 44 ஓட்டங்களையும் எவின் லூயிஸ் 29 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மியர் 27 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM