கடல் என வந்த இந்திய உத்தர பிரதேச மக்கள் சமுத்திரத்தின் மத்தியில் இலங்கை நாட்டிய கலா மந்திர் வழங்கிய  ஸ்ரீ ராம ராஜ்யாபிஷேகம் மிக சிறப்புற நிகழ்ந்தது. 

இந்த தீபோற்சவ விழாவில் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனுடன், அனுபவம் மிக்க நடனக் கலைஞர் டி. கே. திருச்செல்வமும், நாட்டிய கலா மந்திர் கலைஞர்களும் நடன விருந்து அளித்தார்கள். 

சிரேஷ்ட ஊடகவியலாளர்  எஸ். விஸ்வநாதனின் கதை அமைப்பில் உருவான நாட்டிய நாடகத்தை காண பல இந்திய கலைஞர்கள், அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தனர். 

இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த தீபோட்சவ விழா காண உத்தர பிரதேச முதல்வர் வருகை தந்திருந்தார்.

இவரின் முன்னிலையில் நாட்டிய கலா மந்திர் கலைஞர்கள் வழங்கிய ஸ்ரீ ராம ராஜ்யபிஷேகம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.